மதுரையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில்,
தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட கைதியின் வயது,
கொலை நடந்தபோது மைனர் தான் என மகளிர் கோர்ட் உத்தரவிட்டது.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் பூ வியாபாரி மணிவாசகம்.
இவரிடம் அனுப்பானடியை சேர்ந்த வீரபத்திரன் மகன் செல்வம் வேலைக்கு சேர்ந்தார்.
இவர், மணிவாசகம் மகள் நாகசாந்தியை (10), 2006 அக்.,22ல் பாலியல் பலாத்காரம் செய்து, கொன்றார். உடலை "டிவி' பெட்டியில் வைத்து மறைத்தார்.
ஜெய்ஹிந்த்புரம் போலீசார் செல்வத்தை கைது செய்தனர்.
இவ்வழக்கில் செல்வத்திற்கு தூக்குதண்டனை விதித்து,
மகளிர் கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து செல்வம் தரப்பில் ஐகோர்ட் கிளையில் அப்பீல் செய்யப்பட்டது.
இதில், கொலை நடந்தபோது, செல்வத் திற்கு 17 வயது, நான்கு மாதங்கள், 21 நாட்கள் மட்டுமே பூர்த்தியாகி இருந்தது.
எனவே, 18 வயது பூர்த்தியாகாத மைனர் செல்வம் மீதான வழக்கை, சிறுவர் கோர்ட் தான் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்.
மகளிர் கோர்ட் விசாரித்தது செல்லாது என உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
இதை ஐகோர்ட் கிளை ஏற்றது. செல்வம் வயது குறித்த விசாரணை மகளிர் கோர்ட்டில் நடந்தது.
அரசு மருத்துவமனையில், செல்வம் வயது குறித்து ரேடியாலஜி சோதனை நடத்தப் பட்டது.
அதில் சிறுமி கொலையான போது செல்வத்திற்கு 18 வயது பூர்த்தியாகியிருக்கிறது என சான்று அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
செல்வத்தின் பிறப்பு சான்றில் உள்ள பிறந்த தேதியை மகளிர் கோர்ட் ஆய்வு செய்யவில்லை.
எனவே, அதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என செல்வம் தரப்பில் கோரப்பட்டது. இதற்கு ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியது.
இதையடுத்து செல்வம் பிறந்த தேதி குறித்த விசாரணையை மகளிர் கோர்ட் நடத்தியது.
திருப்பரங் குன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செல்வம் படித்தார். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி கோர்ட்டில் ஆஜராகி கடந்த செப்.,2ம் தேதி சாட்சியம் அளித்தார்.
செல்வம் பிறந்த தேதி சான்று தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்த தீர்ப்பை தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
மனுதாரர் சார்பில் வழக்கில் சாதிக் ராஜா ஆஜரானார். இவ்வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில், செல்வம் பிறந்த தேதி 01.06.1987 என பள்ளிச் சான்றில் உள்ளது.
எனவே, சிறுமி கொலையானபோது செல்வம் மைனர் தான் என உத்தரவிட்டார்.
தீர்ப்பு விவரம் ஐகோர்ட் கிளைக்கு அனுப்பப்படவுள்ளது.
அட பாவிகளா 17 வயசு ஆனாலும் அவன் செய்தது கொலை, கற்பழிப்பு குற்றம் இதில் என்ன மைனர் மேஜர் இவனை எல்லாம் வெளியில விட்டா இன்னும் நிறைய மைனர் குஞ்சு இதே மாதிரி வேலையை காட்ட ஆரம்பித்து விடும்.
1 comments:
கொலையின் தன்மையையும், பாதிக்க பட்ட சிறுமியையும் நீதி மன்றம் கவனத்தில் கொள்ளாதது ஏன்?
Post a Comment