அதான் ஊருக்கும் நல்லது உனக்கும் நல்லது


 லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
(என்ன லட்சியமோ தெரியல பா)

’’தற்போது வரும் அறிக்கைகளில் சிலர்
தங்கள் கோணத்தில் சொல்வதைப் போல
நாங்களும் விரட்டப்பட்டவர்களும் அல்ல.
விடு பட்டவர்களும் அல்ல.
துரத்தப்பட்டவர்களும் அல்ல.  
(நல்ல வேளை உங்களை எந்த கட்சியும் கண்டுக்கல) 
 தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்துப் பார்த்து தூரம் தள்ளி நின்றவர்கள்.
(அப்படியே நில்லுங்க கால் வழிச்சா கொஞ்சம் ஓரமா உட்காருங்க)

கடந்த காலத்து கசந்த அனுபவங்கள் மறக்கவில்லை.  
(நங்களுந்தான்)
அதனால் இந்த தேர்தல் குறித்து
இடைப்பட்ட காலத்தில்
நான் வாய் திறக்கவில்லை. 
(அதான் நாட்டுல கொஞ்சம் மழை பேஞ்சது)

இந்த காலத்தில் அரசியலில் முன்னேறுவதற்கு தேவைப்படுகின்றன சில அடிப்படைத் தகுதிகள்
.(அது நமக்கு தேவையில்ல தலைவா)

அப்படிப்பட்ட
தகுதிகள்
இருந்தால்தான்
தேர்தலில் கூட
கிடைக்கும்போல
இருக்கிறது
கணிசமான தொகுதிகள்.
இன்றைய சூழலில் அரசியலில் முன்னேறுவதற்கு
தேவை யோகம்.
மாறாக தேவை இல்லவே இல்லையோ தியாகம். 
 (ஷ்ஷ்ஷ்........யப்பா முடியல)
   
வரும் இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிக்கும் நாள் ஏப்ரல்-13
வாக்குகளை எண்ணும் நாள் மே-13.
இடையில் இருப்பது ஒரு மாசம்.

எதற்கு இந்த அவகாசம்?  
(என்ன தான் சொல்ல வர்றீங்க)

எனப் பலர் மனதில் எழுந்தது இந்தக் கேள்வி.
எந்த கண்கட்டு வித்தை காரணமாகவும்
கண்டு விடக்கூடாதல்லவா தோல்வி.  
(கண்டிப்பா)
என இந்த தேர்தலில் இறைவனை நோக்கி
நடத்த விரும்புகிறோம் ஒரு வேள்வி.
மின்னணு வாக்கு பதிவில் குளறுபடி
நடப்பதற்கு இருக்கிறதாம் பல வழிமுறை...
ஆகையால் மீண்டும் வர வேண்டும் வாக்குச் சீட்டு முறை...
 (சரி அதுலையும் தில்லு முல்லு பண்ணீட்டாங்கன்னா என்ன செய்யிறது)
அப்படி ஒரு மாற்றம் வராத வரை இந்திய ஜனநாயகத்துக்கே அதுபெரும் குறை.
அமாவாசையன்று மாதத்தில்
வான் நிலவுக்கு ஒரு நாள் விடுமுறை.
சில நாள் வளர்பிறை.
சில நாள் தேய்பிறை.  
(கலக்கீ...டிங்க)
இந்த சட்டமன்றத் தேர்தலை
பொறுத்தவரையில்
எங்களுக்கு இருக்கலாம் தேய்பிறை.

இறைவன் அருளால் வரும் காலத்தில் காண்போம் வளர்பிறை.
இந்த தேர்தல் காலம்
எங்களுக்கான கோடை விடு முறை.
கொள்கையைக் காக்க
இதுதான் எனக்கு தெரிந்த நடைமுறை.  
(புல்லரிக்குது பா) 
தனித்து நின்று தனி ஆவர்த்தனம் வாசிப்போம்
என்று சொல்லவும் கூடாது.
தண்டவாளம் இல்லாத ஊருக்கு புறப்பட்டு போகவும் முடியாது
 (யாருமே இல்லாத கட்சியில் யாருக்கு தலைவா இவ்வளவு விளக்கம்)
என்ற சமயோசித முடிவின்படி இந்த சட்ட மன்ற தேர்தலெனும் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆட்டக்காரர்களாக களமிறங்காமல்
வெறும் பார்வையாளர்களாகவே இருக்க விரும்புகிறோம்’’
என தெரிவித்துள்ளார்.
அவர சந்திச்சு பேட்டி எடுத்த அத்தனை பத்திரிக்கையாளர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என்பது கூடுதல் தகவல்)
தலைவா, அப்படியே பார்வையாளாராவே பாத்துக்கிட்டே இரு 
அதான் ஊருக்கும் உனக்கும் மக்களுக்கும் நல்லது.
மக்கள் தலைவர் டி.ஆர், கனவுல வந்து சொன்ன கவிதை....!

கொசு கடிச்சா நல்லா சொறி,
ஆடு வெட்டினா கிடைக்கும் கறி,
உன்னை கடிச்சா நாய்க்கு பிடிக்கும் வெறி,
அதி வேகமா ஒடுறது பரி,
நாட்டுக்குள்ள இருக்குது நிறைய நரி,

கடல்ல கிடைக்குது உப்பு
இந்த மானங்கெட்ட அரசியல்வாதிகள காறிதுப்பு
பத்தவச்சா வரும் நெருப்பு
எங்க கிட்ட வேகாது உன் பருப்பு
கால்ல போடுறது செருப்பு
மக்களெல்லாம் உன்மேலஆயிட்டாங்க கடுப்பு. 
ஏய் டண்டனக்கா டனக்குனக்கா...... வரட்டா.....!


1 comments:

அப்பாவி தமிழன் பரணி said...

அண்ணே கவிதை சூப்பர் எங்க ல திமுக தலைவர் சொன்ன மாதிரி இருக்குது

Post a Comment

இதுவும் நம்மது தான்

  • ஏறு தழுவல் - இந்த ஆண்டு சல்லிக்கட்டு தடையை நீட்டிக்கும் பட்சத்தில் அதற்கு காரணமான 2 திராவிட கட்சிகளையும் 2 தேசிய கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். வர இருக்கும் சட்ட ...
    9 years ago
  • மாமனார் குளோஸ் - திருவட்டாரை அடுத்த கண்ணனூர் சங்கரன் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன். ராணுவ வீரர். பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 30). இவர்களுக...
    12 years ago

Pages

இந்த பக்கம் வந்தவுங்க

Powered by Blogger.

நிலா

நிலா
நிலா

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Popular Posts

Followers

About Me

My Photo
ஆயிரத்தில் ஒருவன்
View my complete profile

Blog Archive