காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்கும் நகரில் உள்ள பிச்சைக்காரர்களின் தொல்லையை ஒழிக்க மாநில அரசு புது முடிவெடுத்துள்ளது. அடுத்த மாதம் 3 முதல் 14 வரை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்றுவருகிறது. நகரில் திரியும் பிச்சைக்காரர்களின் தொல்லை அரசுக்கு தீராத தலை வலியை ஏற்படுத்துகிறதாம். நகரில் ஏராளமான பிச்சைக்காரர்கள் உள்ளனர். காமன்வெல்த் போட்டி நடைபெறும் நேரத்தில், வெளிநாட்டு பார்வையாளர்களின் கண்ணில் இந்த பிச்சைக்கார கூட்டம் தென்பட்டால் அது கவுரவ குறைச்சல் இருக்குமாம் பிச்சைக்காரர்களை கண்ணில் படாமல் மறைக்க நகரத்தில் உள்ள பூங்காக்களில் தற்காலிக கூடாரங்களை அமைத்து பிச்சைக்காரர்களை தங்க வைக்க போகிறார்களாம் பார்க்கை சுற்றி காமன்வெல்த் போட்டி தொடர்பான பேனர்களை வளைத்து கட்டி, பிச்சைக்கார கூடாரங்களை மறைத்துவிடபோகிறார்களாம் நாட்டுல நிறைய குடிசைங்க இருக்கு அத எப்படி மறைக்க போறீங்க.....! வெட்டி பந்தா வேஸ்ட் இசைக்கு ஆஸ்கார் அவார்டு வாங்கின படம் கூட நம்ம நாட்டு குடிசை வாசிகளையும் பிச்சைகாரர்களையும் பற்றிய படம் தான் அதெல்லாம் என்ன செய்ய போறீங்க.....?
1 comments:
இது தான் இன்றைய இந்தியா ... இன்றைய நமது தலைவர்களின் அணுகுமுறை...
Post a Comment