தூ.... கருமம்

கரூர்ல மாவட்ட சேவாதள நிர்வாகிகள் கூட்டம்,
புதிய நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ் வழங்கும் விழா நடந்துருக்கு. நிகழ்ச்சியில் சேவாதள மாநில அமைப்பாளர்கள் பங்கேற்க வந்துருக்காங்க .தலைவரை கண்டித்து, கரூர் பஸ் ஸ்டாண்ட்  அருகில,
ஒரு பேனரில், அவரது படம் மற்றும் கண்டன வாசகம் எழுதி, காரித்துப்பி வரவேற்கிறோம்' என எழுதி வச்சுருக்காங்க
கரூர் வந்த காங்கிரஸ் சேவாதள மாநில அமைப்பாளரின் படம் இடம்பெற்ற பேனரில், காரித்துப்பி வரவேற்பளித்து, எதிர் கோஷ்டியினர் புதிய வகையில் விளம்பரம் தேடினர்
என்னய்யா இது புதுசா இருக்கே...!
உண்மையிலேயே ஓட்டு போட்ட மக்கள் தான் உங்க மேல காரி துப்பனும் ஆனா உங்களுக்குள்ளேயே துப்பிக்கிறீங்க  
தூ.... கருமம்

No.1

பணபலத்தால் தேர்தல் முடிவுகளை மாற்றுவதில்,
தமிழகம் முதலிடத்தில் உள்ளதாம்.
முறைகேடாக நடக்கும் தேர்தல்கள், ஜனநாயகம் செழிக்க உதவாது
என்று திருவாய் மலர்ந்து சொல்லியிருக்கிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் கோபாலசாமி.
இதை பதவியில் இருக்கும் போதே சொல்றதுக்கு பயமா இருந்திருக்கும் போல அதான் இப்ப சொல்றாரு  தமிழகம் அனைத்திலும்  
No.1 என்பது இவருக்கு தெரியாதா...?

அள்ளு அள்ளு


தலைநகர் டெல்லியில் நாட்டிலேயே அதிக செலவில் உருவாகியுள்ள 5 ஸ்டார் ஓட்டல் திறக்க போறாங்களாம்.
புதுடெல்லி சாணக்கியபுரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஓட்டல் கட்ட ஆரம்பித்து. 3 ஏக்கர் நிலத்தில ரூ.700 கோடி செலவு பண்ணி பணிகள் தொடங்கி.
260 ஆடம்பர அறைகளை அங்குலம் அங்குலமாக செதுக்கி உருவாக்கியிருகாங்களாம்.
இதற்காக 900 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாம்.
மொத்த செலவு 1600 கோடியாம்.
இதுதான் இந்தியாவிலேயே அதிக செலவில் உருவாக்கப்பட்ட ஆடம்பர ஓட்டல்.
வரும் அக்டோபர் 1ம் தேதி டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஓட்டலை திறந்து வைக்கிறார்.
அதிக மதிப்பில் உருவாகியிருந்தாலும் இன்னும் மூன்று வருடங்களில் போட்ட காசை எடுத்து விடுவோம் என்று கூறுகின்றனர் ஓட்டல் நிர்வாகத்தினர்.
நம்ம இந்தியாவுல தான் பண முதலாளிகள் கண்னை மூடிகிட்டு முதலீடு செய்யலாம்  லாபத்தை  
அள்ளு அள்ளு
 என்று அள்ளலாம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

வேலை வெட்டி

தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச மொபைல் சேவை வழங்கும் திட்டத்தை  மத்திய அமைச்சர் ஆ.ராசா துவக்கி வச்சுருக்கார்
வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு, இலவச செல்போனுடன், வாழ்நாள் முழுவதும் பேசும் வகையிலான செல்போன் இணைப்பை பி.எஸ்.என்.எல். வழங்க ஏற்பாடு செய்துள்ளதாம்.
தமிழ்நாட்டில், வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு, இலவச செல்போனுடன் செல்போன் இணைப்பு வழங்கும் திட்டம்,
திருப்பூர்ல் நடந்துருக்கு.  
வேலை வெட்டி ஏதாவது கொடுங்கப்பா வெட்டி வேலை பாக்காதீங்க முடிஞ்சா மின்சாரத்தை தடையில்லாம கொடுங்க பாருங்க
இந்த இலவசத்தை கொடுத்து கொடுத்து மக்கள சோம்பேறி ஆக்காதீங்க 

மைனர் குஞ்சு

மதுரையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில்,
தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட கைதியின் வயது,
கொலை நடந்தபோது மைனர் தான் என மகளிர் கோர்ட் உத்தரவிட்டது.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் பூ வியாபாரி மணிவாசகம்.
இவரிடம் அனுப்பானடியை சேர்ந்த வீரபத்திரன் மகன் செல்வம் வேலைக்கு சேர்ந்தார்.
இவர், மணிவாசகம் மகள் நாகசாந்தியை (10), 2006 அக்.,22ல் பாலியல் பலாத்காரம் செய்து, கொன்றார். உடலை "டிவி' பெட்டியில் வைத்து மறைத்தார்.
ஜெய்ஹிந்த்புரம் போலீசார் செல்வத்தை கைது செய்தனர்.

இவ்வழக்கில் செல்வத்திற்கு தூக்குதண்டனை விதித்து,
மகளிர் கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து செல்வம் தரப்பில் ஐகோர்ட் கிளையில் அப்பீல் செய்யப்பட்டது.
இதில், கொலை நடந்தபோது, செல்வத் திற்கு 17 வயது, நான்கு மாதங்கள், 21 நாட்கள் மட்டுமே பூர்த்தியாகி இருந்தது.
எனவே, 18 வயது பூர்த்தியாகாத மைனர் செல்வம் மீதான வழக்கை, சிறுவர் கோர்ட் தான் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்.
மகளிர் கோர்ட் விசாரித்தது செல்லாது என உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

இதை ஐகோர்ட் கிளை ஏற்றது. செல்வம் வயது குறித்த விசாரணை மகளிர் கோர்ட்டில் நடந்தது.
அரசு மருத்துவமனையில், செல்வம் வயது குறித்து ரேடியாலஜி சோதனை நடத்தப் பட்டது.
அதில் சிறுமி கொலையான போது செல்வத்திற்கு 18 வயது பூர்த்தியாகியிருக்கிறது என சான்று அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
செல்வத்தின் பிறப்பு சான்றில் உள்ள பிறந்த தேதியை மகளிர் கோர்ட் ஆய்வு செய்யவில்லை.
எனவே,  அதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என செல்வம் தரப்பில் கோரப்பட்டது. இதற்கு ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியது.
இதையடுத்து செல்வம் பிறந்த தேதி குறித்த விசாரணையை மகளிர் கோர்ட் நடத்தியது.
திருப்பரங் குன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செல்வம் படித்தார். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி கோர்ட்டில் ஆஜராகி கடந்த செப்.,2ம் தேதி சாட்சியம் அளித்தார்.
செல்வம் பிறந்த தேதி சான்று தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்த தீர்ப்பை தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
மனுதாரர் சார்பில் வழக்கில் சாதிக் ராஜா ஆஜரானார். இவ்வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், செல்வம் பிறந்த தேதி 01.06.1987 என பள்ளிச் சான்றில் உள்ளது.
எனவே, சிறுமி கொலையானபோது செல்வம் மைனர் தான் என உத்தரவிட்டார்.
தீர்ப்பு விவரம் ஐகோர்ட் கிளைக்கு அனுப்பப்படவுள்ளது.

 அட பாவிகளா 17 வயசு ஆனாலும் அவன் செய்தது கொலை, கற்பழிப்பு குற்றம் இதில் என்ன மைனர் மேஜர் இவனை எல்லாம் வெளியில விட்டா இன்னும் நிறைய மைனர் குஞ்சு இதே மாதிரி வேலையை காட்ட ஆரம்பித்து விடும். 
 

உண்டியல்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்  தொடங்கியாச்சு. தொடர்ந்து 3 நாட்கள் லீவு வுட்டதுனால ஏராளமான பக்தர்கள் தரிசனம் செஞ்சிருக்கங்க.
முதல் நாளிலேயே அவுங்க செலுத்திய உண்டியலில் காணிக்கை ரூ. 1.95 கோடியை தாண்டியிருக்கு.
நேற்று ஒருநாள் மட்டும் 4,890 பேர் முடிகாணிக்கை செஞ்சிருக்காங்க. தேவஸ்தான அன்ன தான சத்திரத்தில் 18,590 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டிருக்கு .
தினமும் கோடிகணக்குல தான் வருமானம் வருதுங்குறாங்க டன் கணக்கா தங்கம் இருக்குங்றாங்க  ஆனா,
அதே கோடி கணக்குல மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே பட்டினியும் பசியுமா இருக்குறத பார்க்குறோம்
அந்த கோடி கணக்கான உண்டியல் பணத்தையெல்லாம் வெச்சு என்ன செய்ய போறாங்கன்னு தெரியல
அந்த பணத்தை எல்லாம் பட்டினியும் பசியுமா இருக்கிற ஏழை எளிய மக்களுக்கு பசிய போக்க குடுத்தா சாமி என்ன கோவிச்சுக்குமா.....? 
எதுகுய்யா அங்க கொண்டு போய் இப்படி கொட்டுறீங்க
இல்லாதவங்களுக்கு குடுத்து உதவுங்க பா
அப்புறம் பாருங்க புண்ணியம் தன்னால் வந்து சேரும்... கொஞ்சம் யோசிங்கபா

வெட்டி பந்தா வேஸ்ட்

காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்கும் நகரில் உள்ள பிச்சைக்காரர்களின் தொல்லையை ஒழிக்க மாநில அரசு புது முடிவெடுத்துள்ளது. அடுத்த மாதம் 3 முதல் 14 வரை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.  அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்றுவருகிறது. நகரில் திரியும் பிச்சைக்காரர்களின் தொல்லை அரசுக்கு தீராத தலை வலியை ஏற்படுத்துகிறதாம். நகரில் ஏராளமான பிச்சைக்காரர்கள் உள்ளனர். காமன்வெல்த் போட்டி நடைபெறும் நேரத்தில், வெளிநாட்டு பார்வையாளர்களின் கண்ணில் இந்த பிச்சைக்கார கூட்டம் தென்பட்டால் அது கவுரவ குறைச்சல்  இருக்குமாம்   பிச்சைக்காரர்களை கண்ணில் படாமல் மறைக்க நகரத்தில் உள்ள பூங்காக்களில் தற்காலிக கூடாரங்களை அமைத்து பிச்சைக்காரர்களை தங்க வைக்க போகிறார்களாம் பார்க்கை சுற்றி காமன்வெல்த் போட்டி தொடர்பான பேனர்களை வளைத்து கட்டி, பிச்சைக்கார கூடாரங்களை மறைத்துவிடபோகிறார்களாம் நாட்டுல நிறைய குடிசைங்க இருக்கு அத எப்படி மறைக்க போறீங்க.....!      வெட்டி பந்தா வேஸ்ட் இசைக்கு ஆஸ்கார் அவார்டு வாங்கின படம் கூட நம்ம நாட்டு குடிசை வாசிகளையும்  பிச்சைகாரர்களையும் பற்றிய படம் தான் அதெல்லாம் என்ன செய்ய போறீங்க.....?

அட பாவிகளா

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி
 
மன்மோகன் சிங்  -  4.30 கோடி
பிரணாப்முகர்ஜி - 1 கோடி ரூபாய்,
அவரது மனைவி - 1.5 கோடி ரூபாய், 
எஸ்.எம்.,கிருஷ்ணா - 1 கோடி ரூபாய்,
சரத்பவார் - 3.9 கோடி ரூபாய்,
அவரது மனைவி - 2.16 கோடி ரூபாய், 
கபில்சிபில் -14 கோடிரூபாய்,
அவரது மனைவி - 7 கோடி ரூபாய் 
சிதம்பரம் - 5 கோடி ரூபாய்,
அரவது மனைவி - 7 கோடி சேர்த்து சுமார் 15 கோடிக்கு சொத்து உள்ளது.
மு.க.அழகிரிக்கு - 9 கோடி ரூபாய் .
அவரது மனைவி - 6 கோடி ரூபாய், 
மம்தா பானர்ஜி - 6 லட்சம் ரூபாய், 
அந்தோணி - 1 லட்சம் ரூபாய், 
ராசா - 88 லட்சம் ரூபாய்,

அளவிற்கு சொத்து மதிப்பு உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அட பாவிகளா
எப்ப தாண்டா உண்மையான சொத்து கணக்கை வெளியிட போறீங்க.....

பிரம்மாண்டம்

பிரமாண்டத்தை மக்கள் விரும்புகின்றனர். காங்கிரசாலும் பிரமாண்டத்தை காட்ட முடியும். திராவிட கட்சிகளுக்கு காங்., சளைத்தது அல்ல. என அகில இந்திய காங். உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சொல்லியிருக்கிறார் பிரம்மாண்டம்னு எதை சொல்றீங்க பணத்தை தானே...? அது தான் உங்கிகிட்ட நிறைய இருக்கே

வடை போச்சே....!

கடலூர் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் சாலக்கரை வெங்கடேசன் மகள் புவனேஸ்வரிக்கும், கடந்த 30ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் திருமணம் நடந்ததிருக்கு. அன்னைக்கு இரவு புவனேஸ்வரி வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணப்பெண் விரும்பாததால் முதலிரவு நடக்கவில்லை. மறுநாள் பெண்ணின் தாயார் புதுமாப்பிள்ளை ரமேஷிடம், பெண்ணை சினிமாவிற்கு அழைத்துச் சென்றால் மனம் விட்டு பேசுவாள் என, கூற அதன்படி ரமேஷ், புவனேஸ்வரியுடன் கடலூர் ஒரு தியேட்டரில்  வம்சம் படம் பார்க்கச் சென்றுள்ளனர் காட்சி முடிந்து வெளியே வந்ததும் புவனேஸ்வரி, தியேட்டர் முன் பைக்குடன் நின்றிருந்த இருவரைக் காண்பித்து, எனது நெருங்கிய உறவினர்கள் என, ரமேஷிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவரும் இருவரிடமும் நலம் விசாரித்திருக்கிறார். பின் புவனேஸ்வரி உறவினருடன் பைக்கில் பேசிக் கொண்டே வருவதாக கூறி. நீங்கள் அந்த பைக்கில் வாருங்கள்' எனக் கூறி மற்றொரு பைக்கை காண்பித்தார். அதனை நம்பிய ரமேஷ் ஒரு பைக்கிலும், புவனேஸ்வரி மற்றொரு பைக்கிலும் வீட்டிற்கு புறப்பட்டனர். புவனேஸ்வரியை ஏற்றிக் கொண்டு முன்னால் சென்ற பைக் சிறிது தூரத்தில் ரமேஷின் பார்வையிலிருந்து மறைந்தது ரமேஷை ஏற்றிச் சென்றவர் திடீரென பைக்கை நிறுத்தி, "இங்கேயே நில்லுங்கள். இதோ வந்து விடுகிறேன்' எனக் கூறிவிட்டு மாயமானார். வெகு நேரம் காத்திருந்த மாப்பிள்ளைக்கு சந்தேகம் வரவே, தனது மொபைல் போனில் வீட்டிற்கு பேசலாம் என பார்த்தபோது, யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அனைத்து எண்களும் அழிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் சாலக்கரையில் வீட்டிற்குச் சென்று பார்த்த போது தான், தன் மனைவி சினிமா தியேட்டரில் தனது மொபைல் போனை வாங்கி அனைத்து எண்களையும் திட்டமிட்டு அழித்தது தெரிந்தது. உறவினர் எனக்கூறி பைக்கில் வந்தவரை அறிமுகம் செய்து வைத்தது அவரின் காதலன் என்ற தகவலை அறிந்த ரமேஷ் நொந்து போயுள்ளார். வடை போச்சே....!

இதுவும் நம்மது தான்

  • ஏறு தழுவல் - இந்த ஆண்டு சல்லிக்கட்டு தடையை நீட்டிக்கும் பட்சத்தில் அதற்கு காரணமான 2 திராவிட கட்சிகளையும் 2 தேசிய கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். வர இருக்கும் சட்ட ...
    3 years ago
  • மாமனார் குளோஸ் - திருவட்டாரை அடுத்த கண்ணனூர் சங்கரன் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன். ராணுவ வீரர். பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 30). இவர்களுக...
    6 years ago

Pages

இந்த பக்கம் வந்தவுங்க

Powered by Blogger.

நிலா

நிலா
நிலா

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Popular Posts

Followers

About Me

My Photo
ஆயிரத்தில் ஒருவன்
View my complete profile

Blog Archive