அரசியல்ல இதெல்லாம் சாதரணம்பா

தமிழ்ல பேர் வச்சா மட்டுமே வரி விலக்குன்னு தமிழக அரசு சொல்லுது,
ஆன தமிழ்ல பேர் வெச்ச ஒரு படத்துக்கு
வரி விலக்கு அளிக்க மறுத்துவிட்டது காரணம்  
ஒச்சாயி என்பது தமிழ் பேர் இல்லையாம், ஆனா
 'வ' குவாட்டர் கட்டிங்  என்பது சுத்தமான தமிழ் பெயராம்
அதனால் அதற்கு வரி விலக்கு அளித்திருக்கிறார்கள்,
என்னடா.... இதுன்னு பார்த்தா ஒச்சாயி படத்துக்கு வரிவலக்கு அளிக்காதற்கு காரணம் அந்த படத்தின் கதாநயகன்
அதிமுக மதுரை மாநகர் மாணவரணி மாவட்டச்செயலாளராம்,
அதுனால தான் வரி விசயத்தில் கைவிரிப்பு
இது தெரியாம பல பேர் குழம்பி போய் இருக்காங்க.
அது சரி அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தா என்ன நடக்கும்
பட தலைப்புல அம்மான்னு பேர் இருந்தா தான் வரி விலக்குன்னு சொன்னாலும் சொல்லுவாங்க ஏன்னா...?            
அரசியல்ல இதெல்லாம் சாதரணம்பா

நீங்க நல்லவரா...? கெட்டவரா....?

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக பல ஆயிரம் கோடி ரூபாயை அரசு செலவு செய்துள்ளதாம்
இவ்வளவு பணம் செலவழித்தும்,
அரசுக்கு கெட்ட பெயர் தான் ஏற்படுகிறதாம்.
எனவே, இதுபோன்ற போட்டிகளுக்காக செலவழிப்பதற்கு பதில்,
வறுமையில் வாடும் மக்களின் மேம்பாட்டுக்காக
அந்த பணத்தை செலவழிக்கலாம்
என்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்த மைதானங்கள் காலியாக இருந்ததாகவும்
காலியாக இருந்த மைதானங்களில்,
காமன்வெல்த் போட்டிகளுக்காக பணியாற்றிய தொழிலாளர்களின் குழந்தைகளை அமர வைத்திருக்கலாம் என்றும்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாட்டில் இருந்த குறைகளால்,
நாட்டின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாம்.
கடந்த 63 ஆண்டுகளில்,
இதுபோல் வேறு எந்த நிகழ்ச்சியிலும் நாட்டுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது இல்லையாம்.
போட்டிகளுக்காக 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தும்
அதனால் பயன் கிடைக்கவில்லை.
மாறாக கெட்ட பெயர் தான் ஏற்பட்டுள்ளதாம்.
விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நாடாக இருப்பதை விட,
விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நாடாக இருப்பது தான் நல்லது என்றும்.
மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.
அட போங்க மணி சார்
காமன் வெல்த் போட்டி நடந்ததுனால தான்
கல்மாடி போன்ற ஆளுக பல ஆயிரம் கோடி ஊழல் செஞ்சு சம்பாரிக்க முடிஞ்சது.
நீங்க பதவியில இல்லாததால இப்படி எல்லாம்  
காம்ரேட்டுகள் மாதிரி பேசுறீங்க  
நீங்க நல்லவரா...? கெட்டவரா....?

என்ன கொடுமை சார் இது

தமிழக மாணவர் காங்கிரஸ் கூண்டோடு கலைக்கபடுதாம்
ராகுல் காந்தி நேரடி பார்வையில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை அறிவிக்க இருக்காங்களாம்.
தேர்தலில் போட்டியிட கண்டிப்பா கல்லூரியில் படிச்சு கிட்டு இருக்குறவங்க மட்டும் தான் தகுதியானவங்களாம் 
இதுல வேடிக்கை பாருங்க
தொலை நிலை கல்வி, திறந்த வெளி கல்வி திட்டதுல படிக்கிறவங்க போட்டியிட முடியாதாம்.
ஏன்...? அதுல படிக்கிறவங்க எல்லாம் மாணவர்கள் இல்லையா....?
மத்திய அரசு தான் தொலைநிலை கல்வி,
திறந்த வெளி கல்விய நடத்த சொல்லி அனுமதி அளிக்குது
அப்படி பாத்தா மத்திய அரசாக இருக்கும் காங்கிரஸ் கட்சியே
அதுல படிச்சா மாணவன் இல்லையின்னு சொல்றது வேடிக்கையா இருக்கு ஏற்கனவே திறந்த வெளி பல்கலை கழகங்கள்ல படிச்சவங்களுக்கு அரசு வேலை கிடைக்காதுன்னு தமிழக அரசு சொல்லிருச்சு
சமீபத்தில் கூட காவல் துறை உதவி ஆய்வாளர்களுக்கு நடந்த தேர்வுல திறந்த வெளியில படிச்சவங்கள தேர்வு எழுத அனுமதிக்கல
நிலைமை இப்படி இருக்க
காங்கிரஸ் கட்சி தேர்தல்ல கூட அங்க படிக்கிறவங்கள அங்கிகரிக்கலைன்னா என்னத்த சொல்லுறது  
என்ன கொடுமை சார் இது
எதுக்கு இந்த கல்வி முறை பேசாம
அந்த கல்வி திட்டதை இழுத்து மூடுங்க
அத வச்சு கல்வி நிறுவனங்கள் தான் சம்பாரிக்குது. 

ங்கொய்யால

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சிறையில் வார்டனாக இருப்பவர் முருகேசன்
இவரு  திருச்சியில் வேலை செஞ்சப்ப 
தமிழக வீட்டு வசதி வாரியத்தால் விற்பனை செய்யப்பட்ட வீடு ஒன்னு மணப்பாறைல வாங்கியிருக்காரு.
அதற்கான பாக்கித் தொகை 32 ஆயிரத்து 760 ரூபாயை முருகேசன்
சில மாதத்துக்கு முன் செலுத்தியிருக்கார்.
வீட்டுக்கான பணம் முழுசயும் கட்டிய முருகேசன்,
வீட்டின் ஆவணங்களை கேட்டு திருச்சியில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரிய அலுவலக, "கிளார்க்' தாண்டவனை அணுகினார்.
அவர், "ஆவணங்களை ஒப்படைக்க வேண்டுமெனில் 2,000 ரூபாய் லஞ்சம் கொடுக்கனும்னு சொல்லியிருக்கார்
லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர்,
லஞ்ச ஒழிப்பு போலீஸிடம்  புகார் செஞ்சுட்டார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி 
தாண்டவன் கேட்ட 2,000 ரூபாய் லஞ்சத்தை முருகேசன்,
வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வைத்து கொடுத்தார்.
அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாண்டவனை கையும், களவுமாக கைது பன்னிட்டாங்க.
அதானே ங்கொய்யால
போலிஸ்கிட்டேயே லஞ்சம் கேட்ட சும்மா விடுவாங்களா
அவுங்க மட்டும் தான் லஞ்சம் வாங்குறதுக்கு ரைட்ஸ் இருக்கு.

ரகசியம்

டில்லியில் நடக்கும் காமன்வெல்த் போட்டியை இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது மனைவியுடன் வந்து துவக்கி வைத்தார்.
பிறகு விளையாட்டுகிராமத்துக்கு சென்று,
அங்குதங்கியுள்ள வீரர்களை சந்தித்தார்.
இங்கிலாந்து பளு தூக்குதல் வீராங்கனைகளின் பயிற்சியை பார்வையிட்டுக் கொண்டிருந்த சார்லஸ்,
திடீரென இந்திய வீராங்கனைகள் பயிற்சி செய்யும் இடத்துக்கு வந்தார். அங்கிருந்த 58 கி.கி., "நடப்புசாம்பியன்'  ரேணுபாலா தேவி,
சந்தியா ராணி, மோனிகா தேவி ஆகியோரை சந்தித்த அவர்
,"உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?'
எனக் கேட்டு வியந்துள்ளார்.
அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லீங்க
எங்க நாட்டை ஆளுற அரசுகள் விலை வாசி பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மக்கள் மேல சுமத்தி சுமத்தி
நாங்க அந்த பாரத்தை தாங்கி தாங்கி அப்படியே பழகிருச்சுங்க
அதான் பளு தூக்கும் போட்டியில நாங்க தொடர்ந்து தங்கம் ஜெயிக்கும் ரகசியம்

வாரிசு அரசியல்

தனது இளைய மகன் தேஜஸ்வியை பயிற்சி அரசியல்வாதி என்று அறிமுகப்படுத்தி களத்தில் இறக்கி விட்டுள்ளார் முன்னாள் கிங் மேக்கர் லாலு பிரசாத் யாதவ். 
மகனை பாட்னாவில் வைத்து செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்திய லாலு இவர்தான் தேஜஸ்வீ. 
எனக்கும், எனது மனைவி ராப்ரிக்கும் உதவியாக இருந்தார். 
அரசியலில் பயிற்சி எடுத்து வருகிறார். 
முழு நேர அரசியலில் இனி ஈடுபடுவார் 
இவரை டிரெய்னி அரசியல்வாதியாக கருதுங்கள். 
என்னுடன் தொடர்ந்து வருவார். 
அரசியலை கற்றுக் கொள்வார் என்றார். 
தொடர்ந்து லாலு பேசுகையில், 
அவருடைய அரசியல் பின்னணியின் உதவியால் ஓஹோவென உயர்ந்து வருவார் என்றும் கூறி முடித்தார் லாலு. 
பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் தேஜஸ்வியை களம் இறக்கவுள்ளார் லாலு. 
ஒருவேளை லாலு கட்சி ஆட்சியைப் பிடித்தால் தேஜஸ்வி முதல்வர் ஆவாரா என்று தெரியவில்லை. 
என்ன இருந்தாலும் லாலு ஜி எங்க தமிழ் நாட்டுல மூனு நாலு தலைமுறையா வாரிசு அரசியல் மாதிரி உங்களால பண்ணமுடியாது. 

காமெடி

மத்திய அமைச்சர்கள் 
சிதம்பரம், வாசன், இளங்கோவன் 
போன்றவர்களுடன் எந்த பிரச்னையும் இல்லையாம். 
தங்களுக்குள் கோஷ்டி பிரச்னை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் தங்க பாலு கூறியிருக்கிறார். 
கோஷ்டி சண்டை இல்லாமால் காங்கிரஸ் கட்சியா....? 
வரலாறு படிங்க சார் காமராஜர் காலத்திலேயே கோஷ்டி சண்டை இல்லாம இருந்தது கிடையாது 
அப்புறம் பாருங்க சும்மா 
காமராஜர் ஆட்சி அமைக்க போறோம், 
காமராஜர் ஆட்சி அமைக்க போறோம் 
அப்படீன்னு கூவிகிட்டே இருக்காதீங்க காமராஜர் ஆட்சி காலத்தில பஞ்சம் தான் தலை விரிச்சு ஆடுச்சு என்பது தான் உண்மை 
அவர் காலத்தில விமானத்தில இருந்து தமிழ்நாடு பூராம் கருவேல மரம் என்கிற விஷ விதையை தூவி விட்டாங்க 
இதை யாரும் மறுக்க முடியாது வேலையில்லா திண்டாட்டம் தலை விரிச்சு ஆடிச்சு அதனால ஆட்சி  கை மாறி தி.மு.க. விற்கு போனது. 
அந்த ஆட்சியத்தான் திரும்ப கொண்டு வர போறீங்களா 
பாவம் மக்கள் அவுங்கள வுட்ருங்க 
இனி மேல பஞ்சம் வந்தா தாங்காது.  
போங்க சார் சும்மா சும்மா  
காமெடி 
பண்ணாம வேற எதாவது புதுசா டிரை பண்ணுங்க

எப்புடி என் ஐடியா

இனி தமிழகத்தை,
"தமிழ்நாடு என்கிற குடிகார நாடு'
என, பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும்
பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி முதல் ஆணை வெளியிடப்படும் என்று பா.ம.க. கட்சி தலைவர் ராமதாசு கூறியிருக்கிறார். எல்லாம் சரி தாங்க முதல்ல உங்க கட்சியில
இருக்கிற நிர்வாகிகள் முதல் தொண்டன் வரை மது யாரும் அருந்துவதில்லை என்ற அறிவிப்பை வெளியிடுங்க
அப்புறம் பாருங்க பெண்கள் ஓட்டு முழுவதும் உங்களுக்கு தான் அப்புறம்  ஆட்சி உங்க கையில தான்  
எப்புடி என் ஐடியா.... 

இதுவும் நம்மது தான்

  • ஏறு தழுவல் - இந்த ஆண்டு சல்லிக்கட்டு தடையை நீட்டிக்கும் பட்சத்தில் அதற்கு காரணமான 2 திராவிட கட்சிகளையும் 2 தேசிய கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். வர இருக்கும் சட்ட ...
    3 years ago
  • மாமனார் குளோஸ் - திருவட்டாரை அடுத்த கண்ணனூர் சங்கரன் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன். ராணுவ வீரர். பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 30). இவர்களுக...
    6 years ago

Pages

இந்த பக்கம் வந்தவுங்க

Powered by Blogger.

நிலா

நிலா
நிலா

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Popular Posts

Followers

About Me

My Photo
ஆயிரத்தில் ஒருவன்
View my complete profile

Blog Archive