undefined
undefined
ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக
இருந்த கல்வியை,
அனைவருக்கும் கல்வி
என்று முழங்கிய கர்ம வீரர் காமராஜ்
அவர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த காங்கிரஸ் கட்சி.
இன்று, அவரின் பிறந்த தின நாளில்
அவரை தமிழில் வாழ்த்த கூட
இந்த பாரம்பரிய தேசிய கட்சி
என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸ்,
என்ன பாடுபட்டு தமிழை பாடாய் படுத்துகிறது பாருங்கள்.
அட மானங்கெட்டவர்களே நீங்கள்
காமராஜரின் ஆட்சியை அமைக்க பாடுபடுவது ஒரு புறம் ஓரமாக இருக்கட்டும்,
முதலில் தமிழை பிழையில்லாமல் எழுத கற்றுக்கொள்ளுங்கள்.
அப்புறம் அவரை பாராட்டலாம்.
தமிழனை தான் தலை எடுக்க விடாமல் ஒழித்து விட்டீர்கள்
தமிழையாவது விட்டு வையுங்கள்.
இந்த சுவரொட்டியில
அவரை திட்டுறாய்ங்கலா....?
இல்ல பாராட்டுராய்ங்கலா......?
ஒன்னுமே புரியல......!
யாருக்காவது புரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க.......!
9 comments:
அவனுக மிக சிறந்த செம்மொழி காவலர்களா இருப்பானுக போல. நான் இந்த போட்டோவை என்னோட பஸ்ல யோஊஸ் பண்ணிக்கிறேன் நண்பரே..
மானங்கெட்டவங்க அப்படித்தான்..... அதான் இப்ப 5 சீட், அடுத்தவாட்டி அதுவும் கிடைக்காது...
இதில் என்ன சந்தேகம்? வாழ் நாளெல்லாம் மக்களுக்காக வாழ்ந்த அந்த உத்தம தலைவன் இருந்த தலைவர் பதவியில் இந்த மாமா பயலும் இருப்பதே கர்ம வீரருக்கு கிடைத்த மிகப்பெரிய இழுக்கு....
அவங்களைச் சொல்லிப் போட்டு நீங்க ' எட்டா கனியை ' எட்டா கணி ஆக்கிப்புட்டீங்களே ....நண்பா...... நமக்கே இப்படிங்கும்போது அவங்க பாவம் அரசியல்வாதிக.... மூளைன்னு சொன்னா அரை பிளேட்டா....புல் ப்ளேட்டான்னு கேக்கற பிறவிக. அவனுக கிட்ட போயி.......( இன்னும் சரியா சொன்னா - எட்டா கனி கூட தப்பு தான். எட்டாக்கனி தான் சரி )
பிழை சரி செய்யப்பட்டது நண்பரே.... தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
அப்புறம் இன்னொன்னு விட்டு போச்சு ......கரும அப்படிங்கறதயும் சுழிச்சிருந்தீங்க......அதில் ஒன்றும் தவறில்லையே... கருமமே கண்ணாயினார் ..அப்படின்னெல்லாம் நீங்க படிச்சதில்லையா.......எதுக்கும் பதிவோட தலைப்பை ஒருவாட்டி பாத்துக்குங்க நண்பா....
"திட்டுறாய்ங்கலா....?
பாராட்டுராய்ங்கலா......?
ஒன்னுமே................"
தமிழை கொலை செய்வதில் நீரும் ஒன்றும் சளைத்தவரல்ல போல் தெரிகிறதே!
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்காரரே!
”திட்டுகிறார்களா?
பாராட்டுகிறார்களா?
ஒன்றும் புரியவில்லையே”
என்றெல்லாம் சரியாக தமிழில் எழுத உமக்கும் தெரியாதா மதுரைக்காரரே?
எல்லாமே தமாசுதானா?
நண்பரே ..நீங்க தொடர்ந்து எழுதுங்க...மனசு அதைரியப் படாதீர்கள்...
திரு ராஜா அவர்களுக்கு எங்க மதுரை மற்றும் சுற்றுவட்டார தமிழ் பேச்சு வழக்கு என்பது கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும், எல்லோரும் சொல்லுவாங்க எங்க ஊரு அதாவது கொங்கு மண்டல தமிழ் பேச்சுதான் இனிமைன்னு ஆனால் நான் சொல்வேன் மதுரை மற்றும் சுற்றுவட்டார ( திருநெல்வேலி, நாகர்கோவில் ) தமிழ் தான் இனிமையானது ஏன்னா இந்த பேச்சுல கள்ளம் கபடம் எதுவும் கலந்து இருக்காது
அண்ணே இவிங்க எப்போவுமே இப்படிதான், மானம் கேட்ட காங்கிரஸ்காரனுக இவனுகளுக்கு எல்லாம் மானம் இருந்து இருந்தா சோனியா காங்கிரஸ் தலைவியாக வந்து இருக்க முடியுமா ??? பெண் சிங்கம் இந்திரா அமர்ந்த அரியணையில் ஒரு பெண் அசிங்கம் சோனியா ஹிம் என்ன சொல்றது நீங்க சொல்ற மாதிரி எல்லாமே தமாசு தான்
Post a Comment