undefined
undefined

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில பெருமளவு முறைகேடுகள் நடந்ததா,
மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ., விசாரிக்கிது . ,
இந்த விவகாரம் தொடர்பான பொதுநல வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்,
நீதிபதிகள் சிங்வி மற்றும் கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்துருக்கு.
அப்போ, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ரவால்,
""இந்த ஊழல் விவகாரம் தொடர்பான ஆவணங்கள் ஏராளமான அளவில் இருப்பதாலும்,
சிக்கலானதாக இருப்பதாலும்,
சி.பி.ஐ., விசாரணையை முடிக்க மேலும் சிறிது அவகாசம் தேவைப்படும்ன்னு சொல்லியிருக்கார்.
இந்த நேரத்தில் குறுக்கிட்ட நீதிபதிகள்,
"நீங்கள் (சி.பி.ஐ.,) வேண்டுமென்றே விசாரணையை மெதுவாக நடத்துகிறீர்கள்.
சி.பி.ஐ., இதுவரை எதையும் செய்யவில்லை.
இது தான் அரசு செயல்படும் முறையா?
மற்ற வழக்குகளிலும் இதை போன்ற நடைமுறையைத் தான் பின்பற்றுகிறீர்களா?
ஏற்கனவே ஓராண்டு முடிந்துவிட்டது' ன்னு சொல்லியிருக்காங்க
இதுக்கு பதிலளிச்ச ரவால்,
""பிரச்னை சிக்கலானதாக இருப்பதால்,
விசாரணையை முடிக்க கால அவகாசமாகும்.
சி.பி.ஐ.,யின் மூத்த அதிகாரிகள் தான் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்கின்றனர்
அப்படின்னு சொல்லிருக்கார்.
அதற்கு நீதிபதிகள்,
"10 ஆண்டுகளில் விசாரணையை முடித்து விடுவீர்களா?'
என, கேள்வி எழுப்பியிருக்காங்க.
என்னையா இது
சின்ன புள்ள தனமா இருக்கு
நம்ம நாட்ல எந்த ஊழல் வழக்கு உடனே முடிஞ்சுருக்கு குறைஞ்சது 20-30 வருஷம் ஆகும்ல
இந்தவிவரம் கூட தெரியாம எப்படி தான் இவுங்க எல்லாம் நீதிபதி ஆனாங்களோ......?