undefined
undefined
ஆந்திராவில அஞ்சல் வழி கல்விக்கான சட்டத் தேர்வு நடந்துருக்கு. இதுல மாவட்ட நீதிபதிகள் கலந்து கிட்டு தேர்வு எழுதிருக்காங்க. அப்போ தேர்வில பிட் அடிச்சு நீதிபதிகள் 5 பேரும் மாட்டிக்கிட்டாங்க. இவ்விவகாரத்தை கையில எடுத்துக் கிட்ட மாநில அரசு அவங்க எல்லாத்தையும் சஸ்பெண்ட் செஞ்சுட்டாங்க. இவங்க மேல ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் படி உயர்நீநதி மன்றம் உத்தரவு போட்டிருக்கு. இதனால இவங்க அடுத்த தேர்வுகள் எழுதுரதற்கு தடை விதிச்சுட்டாங்க. என்னய்யா கொடுமை இது நீதிபதிகளுக்கே தடை விதிச்சுட்டாங்க அவுங்க என்னய்யா பன்னுவாங்க அவுங்க சின்ன வயசுல படிக்கும் போதே பிட் அடிச்சு பழகிட்டாங்க இப்பவும் அத அவங்களால வுட முடியல அதுக்கு போய் அவங்க மேல நடவடிக்கை எடுத்து என்ன ஆக போகுது, சட்டம் ஒரு இருட்டறை தானே அதுனால அப்படி பன்னிடாங்க பா, சரி இந்த அரசியல் வாதிங்க கோடி கோடியா கொள்ளை அடிச்சு வச்சு மக்கள ஏமாத்துறவங்க எல்லாம் சும்மா இருக்கும் போது இவுங்க மேல மட்டும் ஏன்யா இவ்வளவு காண்டு
0 comments:
Post a Comment